நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் திடீர் தற்கொலை: கொரோனா காரணமா?

தமிழகத்தில் கொரோனாவால் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரிசிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை இந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங் அவர்களுக்கு சமீபத்தில்
 
நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் திடீர் தற்கொலை: கொரோனா காரணமா?

தமிழகத்தில் கொரோனாவால் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரிசிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை இந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், இதனால் அவர் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை திருநெல்வேலி பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web