தேர்தல் பணியில் அலட்சியம்! 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  நிலையில் அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. அவர் சில தினங்களாக செய்தியாளர்கள் மத்தியில் தேர்தல் குறித்த தகவல்களை கூறிவந்தார்.

suspend

மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே கொண்டுசெல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத தங்க நகைகளையும் பணங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் இன்று தேர்வு பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் ஆகிய பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி காவலர்கள் பிரசாந்த், குமாரவேல் போன்றோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும் தேர்தல் பார்வையாளர்  ராம்கிருஷ்ணகேடியா  ஆய்வறிக்கையை சரி பார்க்காமல் அலட்சியம் காட்டினர். மேலும் அவர் அறிக்கை அளித்து இரண்டு மணி நேரம் ஆகியும் பணியில் செய்யாமல் அலட்சியம் இருந்ததால் தேர்தல் பறக்கும் படை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் ராமகிருஷ்ண கேடியா புகாரின் பேரில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை எடுத்தார். இதனால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

From around the web