ஆன்லைனில் நடத்தப்படுகிறதா நீட்தேர்வு? பரபரப்பு தகவல்

நீட் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது நாட்டில் நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் அல்லது நீட்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு
 

நீட் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது நாட்டில் நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் அல்லது நீட்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தேசிய தேர்வு முறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தேசிய தேர்வு முகமை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்து விட்டதாக கூறி உள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்காக வந்தே பாரத் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதால் இந்தியாவில் தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும் வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்கள் அமைக்க முடியாது என்றும் கூறியுள்ளது

மேலும் தேர்வு தேதி போதிய அவகாசத்துடன் அறிவிக்கப்பட்டதால் தேர்வு தேதியை ஒத்தி வைக்க முடியாது என்று கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த மனு மீண்டும் நாளைக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web