வெளியானது நீட் தேர்வு விடைகள்: மாணவர்கள் ஆர்வம்!

 

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் மட்டும் கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும் அதனையும் மீறி கடந்த 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது 

இந்த தேர்வுக்கு முந்தைய நாள் தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடும் பாதுகாப்புடன் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது நீட் தேர்வுக்கான விடைகள் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளதை அடுத்து அதனை மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர் 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

From around the web