நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைப்பா? மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் இம்மாதம் நடத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய
 

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைப்பா? மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் இம்மாதம் நடத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது

இதனையடுத்து இன்று தேசிய தேர்வு முகமை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது டுவிட்டரில் கூறியபோது ’இப்போது இருக்கும் சூழ்நிலையில் நீட் மற்றும் தேர்வுகள் நடத்துவது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது என்று கூறியுள்ளார்

இன்று தாக்கல் செய்ய இருக்கும் தேசிய தேர்வு முகமை அறிக்கையிலும் நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட பரிந்துரை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த ஆண்டு நீட்தேர்வு இம்மாதம் நடைபெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மேலும் நீட் தேர்வு எப்போது நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்து இன்றைய தேசிய தேர்வு முகமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

From around the web