நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும், யாரும் அச்சப்பட வேண்டாம்: தேர்வுத்துறை இயக்குனர்

செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் சற்று முன் தேசிய தேர்வு முகமை இயக்குனர் வினித் ஜோஷி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்வு மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்றும் தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்கள்
 

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும், யாரும் அச்சப்பட வேண்டாம்: தேர்வுத்துறை இயக்குனர்

செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் சற்று முன் தேசிய தேர்வு முகமை இயக்குனர் வினித் ஜோஷி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்வு மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும் என்றும் தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்

நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்கள் தயாராக உள்ளன என்றும் எனவே மாணவர்கள் அச்சப்படாமல் தேர்வுகளை எழுத வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

முன்னதாக நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை தள்ளிப்போட வேண்டும் என பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் இந்த தேர்வை நடத்தியே தீருவது என்பதில் தேசிய தேர்வு முகமை உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக செய்திருப்பதாக தேசியம் தேர்வு முகமை இயக்குனர் வினித் ஜோஷி அவர்கள் தெரிவித்தாலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப் பெரிய பயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web