இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளை படிப்பதற்கான 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 2020 மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதியிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது துவங்கியது. விண்ணப்பிக்க டிசம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய தேர்வு முகமை ஆனது ஜனவரி 6ஆம் தேதி வரை
 
Neet Last Date

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளை படிப்பதற்கான 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 2020 மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதியிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது துவங்கியது. விண்ணப்பிக்க டிசம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய தேர்வு முகமை ஆனது ஜனவரி 6ஆம் தேதி வரை நீடித்து அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இன்று (06.01.2020) இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த 2020 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 2020 ஜனவரி 7ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் 2020 ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதிக்குள்ளதாக திருத்தம் செய்யலாம். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2020 மார்ச் 27ஆம் தேதியிலிருந்து https://ntaneet.nic.in/ என்ற அதிகார பூர்வ இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம்.

நீட் தேர்வுக்கு https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற அதிகார பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web