நீட் தேர்வு தேவையா? எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும் நீட் தேர்வு தேவையா என்று கேள்வி எழுப்பினார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்!
 
நீட் தேர்வு தேவையா? எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தில் மிகவும் வலிமையாக எதிர்க் கட்சியாக உள்ளது திமுக. கட்சியின் தலைவராக மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். மேலும் இவர் எதிர்க்கட்சியின் சார்பில் அதாவது திமுக கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் சமயத்தில் தனது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

stalin

மேலும் அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில்தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி , திமுக சார்பில் கூட்டணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்து சில நாட்கள் ஆயின. தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனாநோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தமிழகத்தின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.  எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தற்போது கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார் அதன்படி கொரோனா தாக்குதலில் இரண்டாவது அலை பரவி வரும் இந்த சூழ்நிலையிலும் கூட நீட் தேர்வு நடத்துவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதிகரிப்பு உயிரிழப்பும் உயர்ந்து கொண்டு வருவதால் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கொரோனா  சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கு இந்த நீட் தேர்வு அவசியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web