இன்று நீட் தேர்வு முடிவுகள்: 7.5 % உள் ஒதுக்கீடு என்ன ஆச்சு?

 

கடந்த மாதம் கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதினர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக இருக்கும் இந்த தேர்வு முடிவை nta.ac.in மற்றும் ntaneet.nic.in  ஆகிய இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

நாடு முழுவதிலும் இந்த தேர்வை சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர் என்பதும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், செப்
15ல் பேரவையில் ஒருமனதான நிறைவேற்றப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும், உயர்நீதிமன்ற மதுரை கிளையை மட்டுமே ஓபிசி மாணவர்கள் நம்பி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web