நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து திடீர் நீக்கம்: பரபரப்பில் மாணவர்கள்!

 

கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அந்த முடிவுகள் திடீரென இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன 

குறிப்பாக திரிபுரா உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு இருந்ததால் மாணவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை சரியாக சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளதாக கண்டனங்கள் குவிந்து வந்தனம். இதுகுறித்து அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் தேசிய தேர்வு முகமைக்கு கண்டனங்களை தெரிவித்தனர் 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் திடீரென சற்றுமுன் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளி விவரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது இந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு மீண்டும் சரியான புள்ளி விவரங்களுடன் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web