நீட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: எந்த இணையத்தில் டவுன்லோடு செய்யலாம்?

 
neet

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் இது குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் பதிவான நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே

எனவே மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ஆம் தேதியும் இளநிலைப் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதியும் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது 

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ இணைய தளங்களில் இந்த நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த இணையதளங்களின் விவரங்கள் இதோ

முதுநிலைப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை nbe.edu.in என்ற இணையதளத்திலும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை neet.nta.nic.in என்ற இணையதளத்திலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

From around the web