இன்று நீட் தேர்வு: என்னென்ன பொருட்களை மாணவர்கள் கொண்டு செல்லக்கூடாது?

தமிழகத்தில் நேற்று நீட்தேர்வு அச்சம் காரணமாக மூன்று உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது 

 

தமிழகத்தில் நேற்று நீட்தேர்வு அச்சம் காரணமாக மூன்று உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது 

இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர் என்பதும் இதில் தமிழகத்தில் மட்டும் 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 900 மாணவர்களும் நீட் தேர்வை எழுதுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது  

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் புகாரி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் 

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் என்னென்ன பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. நீட் தேர்வு மையத்துக்குள் செல்லும் மாணவர்களுக்கு செல்போன், ப்ளூடூத், பென் டிரைவர், கால்குலேட்டர், கேமரா ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது 
மேலும் கைக்கடிகாரம் வாலட், நகைகள், தண்ணீர் பாட்டில்கள், உணவு பொருள்கள், துண்டு காகிதங்கள் ஆகியவற்றையும் மாணவர்கள் கொண்டு போகக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த பொருட்களை கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது

From around the web