கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன முதல்வர்!

 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான கைக கவசங்கள் ஊசிகள் கையிருப்பில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்
 
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன முதல்வர்!

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் ஏற்கனவே சொல்லியிருந்த ஆறாம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது.தமிழகத்தில்  காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நடைபெற்றது. அதன் பின்னர் பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளது.தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பல கூட்டணி கட்சிகள் களமிறங்கின. அதன்படி அதிமுக பாஜக பாமக போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினர்.

eps

மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும்  அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த முறை போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் தமிழகத்தில் உள்ள பல பகுதிகள் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மத்தியில்  கொரோனா கட்டுப்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். தற்போது அவர் அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார்.

அந்தப்படி கொரோனா வராமல் தடுக்க தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் முகக் கவசங்கள், ஊசிகளும் கையிருப்பில் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 14 முறை மாவட்ட ஆட்சியர்கள் கூட்டமும் மருத்துவ ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் அதிகாரிகள் போன்றோர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூறினார் நான் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆலோசனை செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனவும் அவர் கூறினார். கொரோனா நோய் தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது எனவும் அவர் கூறினார்.

From around the web