"அவசியம் மாஸ்க் போடுங்க! உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க!"

தேர்தல் துண்டு பிரசுரங்கள் உடன் மாஸ்க் வழங்கி ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன.  தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா தாக்கமானது மீண்டும் அதிகரித்துள்ளது.இதனால் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் மிகவும் பலமான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி அதனுடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

dmk

மேலும் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் முகஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் திமுக வேட்பாளராக சாக்கோட்டை அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை கும்பகோணம் பேட்டை , ஆற்றங்கரைப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அவசியம் மாஸ்க் போடுங்க உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி மாஸ்க்குகளை கொடுத்தார். மேலும் துண்டு பிரசுரங்களையும் கொடுத்தார். அப்பொழுது அங்கு உள்ள சிறுவர் ,சிறுமியர்களுக்கு மாஸ்க்  அணிவித்தும் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

From around the web