புதிய கல்வி கொள்கை எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதல்வர் அதிரடி அறிவிப்பு

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய கல்விக் கொள்கை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித எதிர்ப்பும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக வெளிவரவில்லை இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இந்த
 

புதிய கல்வி கொள்கை எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதல்வர் அதிரடி அறிவிப்பு

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய கல்விக் கொள்கை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித எதிர்ப்பும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக வெளிவரவில்லை

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

புதிய கல்விக் கொள்கை புதுச்சேரி மாநிலத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் கருத்தைக் கேட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தமிழக முதல்வரும் புதிய கல்வித் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web