முதல்வர் பதவியை இழந்தார் நாராயணசாமி: காரில் இருந்து தேசியக்கொடி அகற்றம்!

 

புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி சற்றுமுன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு அமைச்சரவையையும் கூண்டோடு ராஜினாமா செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த முதல்வர் நாராயணசாமி சற்றுமுன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராஜினாமா குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தான் முடிவு எடுக்க வேண்டும் அவர் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

narayanasamy

இந்த நிலையில் முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்ததை அடுத்து அவரது காரில் இருந்த தேசியக்கொடி உடனடியாக அகற்றப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை புதுவை மாநில அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுப்பாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web