ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது: நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இப்பவே கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் வாக்குவாதங்கள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக பாஜக கட்சி மிகவும் சுறுசுறுப்பாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளது என்பதும் அதற்காக மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இதில் முத்தாய்ப்பாக நேற்று திடீரென தமிழக
 
nanjil sampath

ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது: நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இப்பவே கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் வாக்குவாதங்கள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழக பாஜக கட்சி மிகவும் சுறுசுறுப்பாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளது என்பதும் அதற்காக மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதில் முத்தாய்ப்பாக நேற்று திடீரென தமிழக பாஜக கட்சி தலைவர் எல்.முருகன் அவர்கள் திடீரென பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களின் இந்த அறிவிப்பு குறித்து நாஞ்சில் சம்பத் அவர்கள் கூறியபோது ’இன்னோவா கார் அல்ல, ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்றும், அவர்கள் பிழைக்கவும் முடியாது என்றும் கூறியுள்ளார்

தமிழக பாஜக தலைவரின் அறிவிப்பும் அதற்கு நாஞ்சில் சம்பத் கொடுத்த பதிலடியும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web