தினகரன் கட்சியில் இருந்து விலகிவிட்டேன்: நாஞ்சில் சம்பத்

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அரசியல் அமைப்பை தொடங்கிய நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த டிடிவி நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் இனிமேல் அதில் இல்லை’
 

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற அரசியல் அமைப்பை தொடங்கிய நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த டிடிவி நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் இனிமேல் அதில் இல்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் வேறு எந்த அணிக்கும் செல்ல மாட்டேன் என்றும் நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை என்றும் கூறிய அவர் விரைவில் அதிரடி முடிவினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web