பாப் பாடகி ரிஹானாவுக்கு நம்மூர் பாடகி பதிலடி: லதா மங்கேஷ்கரின் டுவிட் வைரல்

 

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாம் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறோம்? என பாப் பாடகி ரிஹானா நேற்று பதிவு செய்த ஒரே ஒரு ட்வீட் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த ஒரு ட்வீட் இந்தியாவில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை உலகின் கவனத்தை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ரிஹானாவின் இந்த ட்வீட் சர்ச்சைக்கு உள்ளானது என்பதும், ஏற்கனவே மத்திய அரசு ரிஹானாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல பிரபலங்களும் இதுகுறித்து தங்களது கருத்தை தெரிவித்தனர்.

latha mangeshkar

இந்தியாவின் இறையாண்மையை வெளிநாட்டவர் காப்பாற்ற தேவையில்லை என்றும் இந்தியாவின் விவகாரத்தில் வெளிநாட்டவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் சச்சின், சுரேஷ் ரெய்னா கருத்துக்களை தெரிவித்தனர். அதேபோல் நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் சற்று கடுமையாகவே ரிஹானாவை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர், ரெய்னா, கங்கனாவை அடுத்து தற்போது பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டரில் ரிஹானாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியபோது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாட்டவர் தலையிடக்கூடாது என்றும் இந்தியா தனது உள்நாட்டு பிரச்சினைகளை தாங்களே பேசித் தீர்த்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானாவுக்கு நம்மூர் பாடகி லதா பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web