கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!

கேரளா கோவா உள்பட 6 மாநிலங்களில் இருந்து வருவோர் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு திட்டவட்டமாக முடிவு!
 
கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!

சில நாட்களாக மக்களின் வாய்மொழியாக காணப்படுகிறது  கொரோனா வைரஸ். கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் இருந்து தொடங்கி அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் பரவியது .எனினும் இந்தியாவில் கொரோனா தொற்று  பரவ தொடங்கிய முதலே இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்நோயானது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

certificate

குறிப்பாக இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து மக்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளன. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக காணப்படும் மகாராஷ்டிர மாநில அரசு தற்போது அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி கோவா கேரளா உட்பட 6 மாநிலங்களில் இருந்து வருவோர் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு தெளிவாகக் கூறியுள்ளது .

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரத்தில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அதன்படி கேரளா கோவா குஜராத் டெல்லி ராஜஸ்தான் உத்ரகாண்ட் மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரத்திற்கு வருவோருக்கு பெரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆறு  மாநிலங்களில் இருந்து வருவோர் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

From around the web