அந்தரங்க உறுப்பில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இளம்பெண் அதிர்ச்சி

கொரன பரிசோதனை செய்ய வரும் இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் மும்பையில் 24 வயது பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீஷியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மும்பையை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், தான் வேலை செய்த நிறுவனத்தில் உடன் வேலை செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்தார் இந்த
 
அந்தரங்க உறுப்பில் எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இளம்பெண் அதிர்ச்சி

கொரன பரிசோதனை செய்ய வரும் இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் மும்பையில் 24 வயது பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கொரோனா பரிசோதனை செய்த லேப் டெக்னீஷியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மும்பையை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், தான் வேலை செய்த நிறுவனத்தில் உடன் வேலை செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்தார் இந்த நிலையில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு சென்று தனக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்

இதனையடுத்து அங்கிருந்த லேப் டெக்னீசியன் ஒருவர் அந்த இளம் பெண்ணின் மூக்கில் இருந்து சளி எடுத்து அதன் பின் அந்தரங்க உறுப்பிலும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா பரிசோதனை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாத அந்த பெண் அதற்கும் சம்மதித்து உள்ளார்

அதன்பின் தனது தோழிகள் மற்றும் குடும்பத்தாரிடம் இதுகுறித்து கூறிய போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் லேப் டெக்னீசியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனை என்பது மூக்கில் அல்லது தொண்டையில் இருந்து மட்டுமே சளி எடுக்கப்படும் என்பதும் அந்தரங்க உறுப்பில் இருந்து எந்த பரிசோதனையும் எடுக்கப்படாது என்பதும் மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் லேப் டெக்னீசியன் அந்த இளம்பெண்ணை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web