சென்னை நிறுவனத்திடம் மும்பை ஐடிஎன்எல் நிறுவனம் 200 கோடி மோசடி!

சென்னை நிறுவனத்திடம் மும்பை ஐடி என்எல் நிறுவனம் 200 கோடி மோசடி 3 பேர் கைது!
 
itnl

முன்னொரு காலத்தில் இல்லாதவன் தான் இருக்கிறவன் இடம் பொருள்களை எடுப்பான். ஆனால் தற்போது இருக்கிறவர்கள் இல்லாதவனை சுரண்டி அவனையே அனைத்திற்கும் நம்ப வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேலும் தற்போதுள்ள காலத்தில் திருட்டு தொழில் மற்றும் கொள்ளை போன்றவை அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதுவும் முன்னொரு காலத்தில் அனைத்தும் பொருளும் நேரடியாக கண்களுக்கு முன் திருடுகின்றனர். ஆனால் தற்போது நவீன உலகத்தில் அனைவரின் பேங்க் அக்கவுண்டை ஹேக் செய்வது அவனுக்கே தெரியாமல் அவனது பணத்தை சுரண்டுவது போன்றவை உலகம் எங்குமே அதிகரித்துள்ளது.itnl

இது மக்கள் மனதில் நம்பிக்கை இன்மை சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்நிலையில் தொழில் நிறுவனம் ஒன்று பிற தொழில் நிறுவனத்திடம் கொள்ளையடிப்பது அவர்களின் தொழில் வர்த்தகமாக காணப்படுகிறது. இது பலரின் வாழ்க்கையை மிகவும் பாதிக்கிறது. சென்னை நிறுவனத்திடம் மும்பை நிறுவனம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதில் 3 பேரை கைது செய்துள்ளனர். அதன்படி மும்பையை சேர்ந்த ஐடி என்எல் நிறுவனம் 200 கோடி மோசடி செய்த புகாரில் முன்னாள் நிர்வாக இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

மேலும் முன்னாள் நிர்வாக இயக்குனர் ரவி பார்த்தசாரதி அவரது கூட்டாளிகள் ராம்நாத் கருணாகரன் மற்றும் ஹரி சங்கரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் மும்பையை சேர்ந்த ஐடிஎன்எல்  நிறுவனம் 200 கோடி மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று புகார் அளித்துள்ளது .மேலும் ஐடிஎன்எல்  நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் டிஎஸ்பி பிரகாஷ் பாபு 95 51 1 33 22 9 என்ற தொலைபேசி எண்ணில் கூறி புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

From around the web