மும்பை ஜிஎஸ்டி அலுவலகத்தில் திடீர் தீவிபத்து: உள்குத்து இருக்கின்றதா?

மும்பையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அரசு அலுவலகங்களில் ஏதாவது பிரச்சனை நடந்தால் திடீரென அந்த அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மும்பையில் உள்ள 10 மாடிகளைக் கொண்ட ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேற்று 8வது தளத்தில் திடீரென தீ பிடித்தது இந்த தீ ஒன்பதாவது தளத்திற்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ
 
மும்பை ஜிஎஸ்டி அலுவலகத்தில் திடீர் தீவிபத்து: உள்குத்து இருக்கின்றதா?

மும்பையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசு அலுவலகங்களில் ஏதாவது பிரச்சனை நடந்தால் திடீரென அந்த அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மும்பையில் உள்ள 10 மாடிகளைக் கொண்ட ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேற்று 8வது தளத்தில் திடீரென தீ பிடித்தது

இந்த தீ ஒன்பதாவது தளத்திற்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க போராடினர் சுமார் 5 மணி நேரம் கழித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

இந்த நிலையில் கட்டிடத்தில் இருந்த அலுவலக ஊழியர்கள் அதிகாரிகள் ஆகியோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டாலும் ஏராளமான ஆவணங்கள் தீயில் சேதமடைந்துள்ளதாகவும் இதற்கு ஏதேனும் உள்குத்து காரணம் இருக்குமோ என்றும் சந்தேகப்படுவதாகவும் நெட்டிசன்கள் தங்களுக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

From around the web