மலிவு விலையில் ஸ்மார்ட்போன்: செப் 10 ரிலீஸ் என முகேஷ் அம்பானி அறிவிப்பு

 
mukesh ambani

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மலிவு விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 அன்று அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரிலையன்ஸ் நிறுவனத்தில் 44 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கி இருப்பதாகவும் இந்த போன் ஆண்ட்ராய்டு ஐஓஎஸ்-க்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். விலை மிகவும் மலிவாக கிடைக்கும் இந்த ஜியோ போன் நெக்ஸ்ட் என்னும் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் அன்றைய தினம் முதல் இந்த போன இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து இந்த போன் எப்படி இருக்கும்? இந்த போனின் விலை என்ன? என்தை என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே அதிகரித்துள்ளது.

From around the web