100 டன் ஆக்சிஜன் சிலிண்டர் தருவதாக முகேஷ் அம்பானி அறிவிப்பு!

 
100 டன் ஆக்சிஜன் சிலிண்டர் தருவதாக முகேஷ் அம்பானி அறிவிப்பு!

100 டன் ஆக்சிஜன் சிலிண்டர் தருவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள மருத்துவமனைகளில் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டரை வழங்குமாறு மத்திய அரசுக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் விரைவில் மகாராஷ்டிரா அரசுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

oxygen

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என்ற தகவல் தெரிவித்ததை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் 100 டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக மருத்துவமனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்

இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வழங்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உள்பட அனைவரும் முகேஷ் அம்பானிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்

From around the web