எம்.டெக். படிப்புகளில் இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலைக்கு நீதிமன்றம் யோசனை!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பயிற்றுவித்து வந்த எம்.டெக் படிப்பு படிப்பு திடீரென இந்த ஆண்டு நிறுத்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் எம்.டெக் படிப்பை தொடர்வதாக அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படிப்புக்கு எந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. எம்.டெக் படிப்புக்கு மத்திய அரசின் 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டை தான் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசும் கூறி வந்தது

court

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் யோசனை ஒன்றை அளித்துள்ளது. எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டையும் அடுத்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டையும் பின்பற்றலாம் என யோசனை கூறியுள்ளது. இந்த யோசனையை அடுத்து இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டின் படி 69 சதவீத இட ஒதுக்கீட்டில் தான் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது

மேலும் மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப் போகிறீர்கள் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றினால் பல்கலைக்கழகத்துக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

From around the web