"ஆர் என் ரவி நியமனத்தில் உள்நோக்கம்!" கே எஸ் அழகிரி;

ஆரன் ரவியை தமிழ்நாடு ஆளுநராக நியமித்து இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறியுள்ளார் கே எஸ் அழகிரி
 
r n ravi

தற்போது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக. மேலும் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கூட்டணியுடன் களம் இறங்கி இருந்தது. அதிலும் குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்ததும் தெரியவந்தது, மேலும் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் குறைவான சட்டமன்ற தொகுதி களிலேயே போட்டியிட்டன. இருப்பினும் ஒரு சில இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்து. அவர்களும்  எம்எல்ஏக்கள் ஆக உள்ளனர்.alagiri

இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார் கே எஸ் அழகிரி. அவர் தற்போது தமிழகத்தில் ஆளுநராக நியமித்துள்ள ஆர் என் ரவி குறித்து கூறியுள்ளார். அந்த படி தற்போது நம் தமிழகத்தில் ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார், புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எதிராக கிரண்பேடி நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்தது என்று கே எஸ் அழகிரி கூறினார்.

மேலும் அந்த வகையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை  ஆர் என் ரவியை தமிழ்நாடு ஆளுநராக நியமித்து இருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஜனநாயக படுகொலை நடத்த ஆர் என் ரவியை பயன்படுத்தினால் மக்களை திரட்டி போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web