கணவன் கோபித்துக் கொண்டு போனதால் 2 மாத குழந்தையை விற்ற மனைவி: அதிர்ச்சி தகவல்

கணவர் சண்டை போட்டுக்கொண்டு கோபித்து சென்றதால் இரண்டு மாத குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. ஊரடங்கு நேரத்தில் வறுமை காரணமாக குழந்தைக்கு சரியான சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்பதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது இதில் கோபத்தில் கணவர் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். கணவர் கோபித்துக் கொண்டு சென்றதால் கையில் காசில்லாமல் குழந்தைக்கு பால் பவுடர்
 

கணவர் சண்டை போட்டுக்கொண்டு கோபித்து சென்றதால் இரண்டு மாத குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. ஊரடங்கு நேரத்தில் வறுமை காரணமாக குழந்தைக்கு சரியான சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்பதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது

இதில் கோபத்தில் கணவர் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். கணவர் கோபித்துக் கொண்டு சென்றதால் கையில் காசில்லாமல் குழந்தைக்கு பால் பவுடர் கூட வாங்க முடியாமல் தவித்து உள்ளார்

இந்த நிலையில் அந்த குழந்தையை 45,000 ரூபாய் வாங்கிக் கொள்வதற்காக தரகர் ஒருவர் அவரை அணுகி உள்ளனர். கணவர் கோவித்துக் கொண்டு சென்றதால் ஆத்திரத்தில் குழந்தையை அவர் தரகரிடம் விற்றுவிட்டார்
அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து கணவர் திரும்பி வந்து குழந்தை எங்கே என்று கேட்டபோது 45,000 ரூபாய்க்கு விற்று விட்டதாக கூறியதால் கணவர் அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில் குழந்தையின் தாய் மற்றும் தரகர் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அனைவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்,.

From around the web