நாள் ஒன்றுக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை!

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா  பரிசோதனை பற்றி கூறுகிறார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசானது மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல் படுத்தியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு அரங்கத்தில் கொரோனா தடுப்பு  முகாம் உருவாக்கப்பட்டது.

corona

இந்நிலையில்  தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். அவர் தற்போது கூறினார்,தமிழகத்தில் முன்பு தினசரி ஆக 50000க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது.

இப்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் முக கவசத்தை தவறாமல் போட வேண்டும் எனவும் அவர் கூறினார். தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். கொரோனா தடுப்பு வழி முறைகளை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

From around the web