இந்தியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை
 

இந்தியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,06,737 என்றும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 எனவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் 74860 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் 25872 பேர்களும், டெல்ல்யில் 23645 பேர்களும், குஜராத்தில் 18100 பேர்களும், ராஜஸ்தானில் 9652 பேர்களும், உத்தரபிரதேசத்தில் 8729 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

From around the web