குரங்கை தூக்கில் போட்டு நாய்க்கு உணவாக்கிய கொடூரன்

குரங்கைத் தூக்கில் போட்டு அந்த குரங்கு குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் நிலையில் நாய்க்கு உணவாக போட்ட இளைஞர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாகவே மிருகங்களை கொடுமைப்படுத்தும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவர் தனது வீட்டின் குடிநீர் தொட்டியில் குரங்கு ஒன்று தண்ணீர் குடிப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். இதனையடுத்து அந்த குரங்கை பிடித்து
 
குரங்கை தூக்கில் போட்டு நாய்க்கு உணவாக்கிய கொடூரன்

குரங்கைத் தூக்கில் போட்டு அந்த குரங்கு குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் நிலையில் நாய்க்கு உணவாக போட்ட இளைஞர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாகவே மிருகங்களை கொடுமைப்படுத்தும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவர் தனது வீட்டின் குடிநீர் தொட்டியில் குரங்கு ஒன்று தண்ணீர் குடிப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார்.

இதனையடுத்து அந்த குரங்கை பிடித்து அங்கே இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்க விட்டார். அந்த குரங்கு உயிரை காப்பாற்ற கதறி துடித்தது

இந்த நிலையில் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அந்த குரங்கை அப்படியே தூக்கி நாய்கள் இருக்கும் பக்கம் வீச்னார். அந்த நாய்கள் அந்த குரங்கை கடித்து குதறின

இதனை அடுத்து அங்கிருந்த மற்ற குரங்குகள் ஒன்றுகூடி நாய்களை விரட்டி குரங்கை காப்பாற்றியது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

குரங்குக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லையே என்று பலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து வெங்கடேஸ்வர ராவ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web