நாளை ஊரடங்கு இருந்தாலும் அம்மா உணவகம் செயல்படும்!ஆனால் கட்டுப்பாட்டு விதிகள்!

சென்னையில் நாளையதினம் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று அதிகாரிகள் தகவல்!
 
நாளை ஊரடங்கு இருந்தாலும் அம்மா உணவகம் செயல்படும்!ஆனால் கட்டுப்பாட்டு விதிகள்!

தமிழகத்தில் உள்ள மக்களால் அம்மா என்று அன்பாக அழைக்கப்படும் முதல்வராக இருந்தார் செல்வி ஜெ ஜெயலலிதா. அவர் ஆட்சியில் இருக்கும்போதே மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் ஆனது அனைத்து ஏழை மக்களுக்கும் உதவும் வண்ணமாக உள்ளது. மேலும் இவர் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்பட்டார் என்பதும் தவிர்க்க முடியாத உண்மைதான். இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு முறை முதல்வராக தமிழகத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.jayalalitha

மேலும் இவர் தமிழகத்தில் ஆட்சி செய்த முதல்வர்களில் அதிக முறை முதல்வராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இவரின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் ஆனது தற்போது நாளைய தினமும் செயல்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். காரணம் என்னவெனில் நாளைய தினம் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இந்த முழு ஊரடங்கலிருந்து அம்மா உணவகத்திற்கு விதிவிலக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் நாளை வழக்கம் போல் செயல்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அம்மா உணவகத்தில் மக்களுக்கு உணவு கொடுக்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர். மேலும் போதுமான உணவு கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் நாளைய தினம் சென்னையில் உள்ள ஏழை மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அம்மா உணவகம் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

From around the web