நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மோடி

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா, மாநிலங்களவையில் நேற்று கொண்டு வரப்பட்டது. இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் அரசாணைக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியதையும் குறிப்பிட்டார். இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம்
 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா, மாநிலங்களவையில் நேற்று கொண்டு வரப்பட்டது.

இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்து உரையாற்றினார். 


அப்போது பேசிய அவர், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் அரசாணைக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியதையும் குறிப்பிட்டார். இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது. 

நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மோடிஇந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேசமயம் சிவசேனா, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. 

இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மீது வாக்கெடுப்பில், ஆதரவாக 125 வாக்குகள் கிடைத்தன. எதிராக 61 வாக்குகள் விழுந்தன. 

 
இதனால் இந்த மசோதா நிறைவேறியது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web