யாஸ் புயல்-"1000 கோடி" நிவாரணம் அறிவித்தார் மோடி! ஒரிசாவிற்கு 500 கோடி; மேற்கு வங்கத்திற்கு 500 கோடி;

யாஷ் புயல் நிவாரண பணிகளுக்கு பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்!
 
yash

சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து அதன்பின்னர் யாஸ் புயலாக மாறியது என்று மே 26-ஆம் தேதி வடமேற்கு திசையில்  ஒடிசா மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த யாஸ்  புயலின் காரணமாக பல்வேறு சேதங்கள் உருவாக்கியுள்ளது.  ஆயிரம் கோடி நிவாரணத்தை அறிவித்துள்ளார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி. மேலும் அவர் கூறியுள்ளார் நிவாரண பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.modi

மேலும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் பாரத பிரதமர் நரேந்திரமோடி இத்தகைய ஆயிரம் கோடி ரூபாயை நிவாரணமாக ஒதுக்கியது தெரியவந்துள்ளது. மேலும் யாஸ்  புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மேற்கு வங்கத்துக்கு தலா 500 கோடி என இரண்டு மாநிலத்திற்கும் பிடித்து நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த யாஸ்  புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார் பாரத பிரதமர் நரேந்திரமோடி.

மேலும் யாஸ் புயலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஒடிசா மேற்கு வங்கத்தில் யாஸ்  புயலால் ஏற்பட்ட சேதங்கள் அனைத்தையும் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

From around the web