சென்னை அண்ணா அறிவாலயத்தில் அணிதிரண்ட எம்எல்ஏக்கள்; அவசரக் கூட்டம்!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகை தந்துள்ளதாக தகவல் உள்ளது!
 
dmk

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மேலும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது மே 2ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்றது. மேலும் இந்த சட்டமன்றத்தில் முடிவில் திமுக அமோக வெற்றி பெற்றது. மேலும் தமிழகத்தில் பெரும்பான்மை பிடித்து ஆட்சியையும் பிடித்தது திமுக முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தார். கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.stalin

மேலும் அவருக்கு தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள் சினிமா பிரபலங்கள் போன்றவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில் உள்ள முதல்வர்களும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவசர கூட்டம் ஒன்று கூறப்படுகிறது. கூட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து உள்ளதாகவும் தகவல்  மேலும் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு ஆகிறார் ஸ்டாலின்.

மேலும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும்  மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து அந்த கட்சிகளும் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வருகை புரிந்துள்ளனர். மேலும் அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றியும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web