சன் ரைசர்ஸ் அணிக்கு எம்.எல்.ஏ எச்சரிக்கை!

ஐபிஎல் அணிகளில் ஒன்றாகிய சன்ரைசர்ஸ் அணிக்கு தெலுங்கானா மாநில எம்எல்ஏ ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு உள்ளூர் வீரர்கள் யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது
இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில எம்எல்ஏ தனம் நாகேந்தர் என்பவர் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாய்ப்பு வழங்கவில்லை
அணியின் தேர்விலும் ஏலத்திலும் உள்ளூர் வீரர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் கிரிக்கெட் போட்டியை ஐதராபாத்தில் நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவறினால் எங்கள் மாநில தலைநகர் பெயரான ஹைதராபாத் பெயரை அவர்கள் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது