10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: முக ஸ்டாலின்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் உயிரோடு ஆட்சியாளர்கள் விளையாடுவது அபாயகரமான ஆட்டமாகும் என்றும், தமிழகத்தில் இயல்புநிலை திரும்பிய பிறகு, பொதுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள், தங்களது மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். இயல்பான
 
10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: முக ஸ்டாலின்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் உயிரோடு ஆட்சியாளர்கள் விளையாடுவது அபாயகரமான ஆட்டமாகும் என்றும், தமிழகத்தில் இயல்புநிலை திரும்பிய பிறகு, பொதுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள், தங்களது மறைமுக ஆதாயங்களுக்காக மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம். இயல்பான நிலை திரும்பி, நம்பிக்கையான பாதுகாப்பான நிலை உருவான பிறகு, பொதுத்தேர்வை நடத்தலாம். நாள்தோறும், நோய் தொற்று அதிகரிக்கிறதே தவிர, குறைவதற்கான அறிகுறியே இல்லை.

ஒருவருக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்ற தொடக்க நிலை, தொற்று தெரியாத அளவில் தொற்று பரவி வருகிறது. தேர்வை நடத்திய தீருவது என்ற வறட்டு பிடிவாத முடிவு, மாணவர் உயிருடன் விளையாடுவது அபாயகரமான ஆட்டம். தொற்று எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பில் பெயில் ஆகியுள்ள அரசு, மாணவர்கள் பாஸ் அல்லது பெயில் ஆகியுள்ளனரா என்பதை அறிய தேர்வு நடத்துகிறது.

நோய்த் தொற்றைத் தடுப்பதிலும் – போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமான முடிவு, மாணவ – மாணவியரின் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டமாகும்.

இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

From around the web