நடிகர் பிரசன்னாவுக்கு ஆதரவாக களமிறங்கிய முக ஸ்டாலின்

நடிகர் பிரசன்னா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மின்வாரியம் குறித்து கடுமையான வார்த்தைகளுடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்தார். இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனால் கடுப்பான மின்வாரியம் பிரசன்னாவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்ததோடு, பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளித்தது. இதனையடுத்து பிரசன்னா தனது டுவிட்டரில் மின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்தார். மின் வாரியத்தையோ அரசையோ குறை கூறுவது தனது உள்நோக்கமில்லை என்றும் உள்நோக்கமில்லாதபோதும் என் வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்,
 
நடிகர் பிரசன்னாவுக்கு ஆதரவாக களமிறங்கிய முக ஸ்டாலின்

நடிகர் பிரசன்னா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மின்வாரியம் குறித்து கடுமையான வார்த்தைகளுடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்தார். இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனால் கடுப்பான மின்வாரியம் பிரசன்னாவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்ததோடு, பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளித்தது.

இதனையடுத்து பிரசன்னா தனது டுவிட்டரில் மின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்தார். மின் வாரியத்தையோ அரசையோ குறை கூறுவது தனது உள்நோக்கமில்லை என்றும் உள்நோக்கமில்லாதபோதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன் என்றும் பிரசன்னா தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரசன்னா அரசியல்ரீதியாக மிரட்டப்பட்டதாகவும், இதனையடுத்தே அவர் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டதாகவும் ஒருசிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் திமுக முக ஸ்டாலின் இந்த விஷயத்தில் களமிறங்கியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நடிகர் பிரசன்னா மின் கட்டணம் பற்றி கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக நியாயமான பதிலளிப்பதற்குப் பதில், பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, அரசியல் ரீதியான அறிக்கையை” ஒரு விளக்கமாகக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். முக ஸ்டாலினின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web