தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்தா? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது இந்த நிலையில் இதுகுறித்து கருத்துக் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் மேலும் பல கல்லூரிகளில் கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது
 

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்தா? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து கருத்துக் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும் பல கல்லூரிகளில் கொரோனா மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்

எனவே வரும் ஆகஸ்டில் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது

From around the web