"எங்களுக்கும் வாகனத்தில் சைரன் வேண்டும்"-அமைச்சர் கோரிக்கை!

அமைச்சர்களின் வாகனத்தில் சைரன் வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்
 
siren car

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்களை நியமித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் பலரும் அந்தத் துறைகளில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூடிக்கொண்டு வருகிறது.durai murugan

அதில் ஏராளமான கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. மேலும் புதிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனடிப்படையில் தற்போது அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.மேலும் காட்பாடி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன் கடைசி நேரத்தில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இதனால் தற்போது சட்டப்பேரவையில் அதிக முறை சென்றவர் என்ற பெயரையும் தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்றைய தினம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அதன்படி அமைச்சரின் வாகனத்தில் சைரன் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் மேலும் அவர் அதிகாரிகளுக்கு வழங்கியது போல் எங்களுக்கும் சைரன் விளக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். எங்களுக்கு இல்லை என்றால் அதிகாரிகளுக்கும் வழங்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சைரன் விளக்குகள் அகற்றப்பட்டுள்ளன என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

From around the web