கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர்!ஆரத்தி எடுத்து வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே சி கருப்பணன் தீவிர வாக்கு சேகரிப்பு!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக போன்ற கட்சிகளை வைத்துள்ளது.  தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாஜக கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

admk

மேலும் அதிமுகவிலிருந்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளார்.  அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் கே சி கருப்பணன் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

அவர் வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் அவர் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவர் கூறினார் பெண்களுக்கு உதவும் வகையில் மாதம் 1500 ரூபாயும் வழங்கப்படும் எனவும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் எனவும் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

From around the web