டிவி நடிகர் வரதராஜன் குற்றச்சாட்டு உண்மையா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

பிரபல தொலைக்காட்சி நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் என்பவர் இன்று காலை தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை எந்த மருத்துவமனையும் அனுமதிக்கவில்லை என்றும் பெட் இல்லை என்ற காரணத்தைக் கூறி அவரை அனுமதிக்க மறுத்ததாகவும், மருத்துவமனை நிர்வாகிகள், ஓனர், எம்டி வரை தான் முயற்சித்தும் எந்த உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் இதனை அடுத்து அந்த நண்பர் கடைசியில் ஒரு மருத்துவமனையில்
 

டிவி நடிகர் வரதராஜன் குற்றச்சாட்டு உண்மையா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

பிரபல தொலைக்காட்சி நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் என்பவர் இன்று காலை தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை எந்த மருத்துவமனையும் அனுமதிக்கவில்லை என்றும் பெட் இல்லை என்ற காரணத்தைக் கூறி அவரை அனுமதிக்க மறுத்ததாகவும், மருத்துவமனை நிர்வாகிகள், ஓனர், எம்டி வரை தான் முயற்சித்தும் எந்த உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் இதனை அடுத்து அந்த நண்பர் கடைசியில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகள் 5000 படுக்கை வசதிகள் இருப்பதாகவும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளும் உள்ளதாகவும் படுக்கைகள் நிரம்பி விட்டதாக செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வதந்தி பரப்பும் வகையில் ஈடுபட்டுள்ளதாகவும் பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

வரதராஜன் வீடியோவும் அதற்கு அமைச்சர் அளித்த விளக்கமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

From around the web