திமுகவில் இணைந்தார் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன்: பரபரப்பு தகவல் 

 

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சி விட்டு கட்சி மாறும் படலங்களும், புதிதாக அரசியலுக்கு வரும் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது 

இந்த நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் என்பவர் திமுகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது 

இந்த நிலையில் இன்று செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைந்து இருப்பது இணைந்திருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web