தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல் இல்லாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என பரவலாக செய்தி வெளி வந்தாலும் பள்ளிக்கல்வித்துறை
 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல் இல்லாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என பரவலாக செய்தி வெளி வந்தாலும் பள்ளிக்கல்வித்துறை இதனை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து பேட்டியளித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ’தமிழகத்தில் பள்ளி கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறினார். கொரோனா சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்

எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

ஆன்லைனில் மட்டுமே தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடக்கும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே இந்த கல்வியாண்டையே மாணவர்கள் இழந்துவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

From around the web