அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா: அமைச்சருக்கு கொரோனாவா?

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பதும் அதனையடுத்து மேலும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி
 

அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா: அமைச்சருக்கு கொரோனாவா?

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பதும் அதனையடுத்து மேலும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு அமைச்சரின் மனைவிக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web