கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ நிலை என்ன? மருத்துவர்கள் தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டார் என்றும் அவர் மட்டுமின்றி அவரது மனைவியும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்றும் செய்திகளைப் பார்த்தோம் இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளித்ததன் விளைவாக தற்போது அவர் கொரோனாவால் இருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளார் இதனை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் அவர் பூரண குணம் அடைந்து வீடு
 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ நிலை என்ன? மருத்துவர்கள் தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டார் என்றும் அவர் மட்டுமின்றி அவரது மனைவியும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்றும் செய்திகளைப் பார்த்தோம்

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளித்ததன் விளைவாக தற்போது அவர் கொரோனாவால் இருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளார்

இதனை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

இருப்பினும் அவர் சில நாட்களுக்கு கவனத்துடன் இருப்பார் என்றும் அதனால் ஒரு சில நாட்கள் கழித்து அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்பதும் அவர் தனது வழக்கமான பணிகளை கவனிக்க தொடங்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதால் பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

From around the web