அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது என்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டு உள்ளது என்பதும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சற்று
 
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது என்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டு உள்ளது என்பதும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சற்று முன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

அரசு பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆகஸ்ட் 10ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே ஆலோசிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் பள்ளிகள் வரும் நவம்பர் மாதம் திறக்கப்படலாம் என்றும் முதலில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் அதன் பின்னர் படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் திறக்கபடலாம் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த கல்வி ஆண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நேரடியாக பொதுத்தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

From around the web