எடப்பாடி பழனிசாமிதான் என்றும் முதல்வர்: செல்லூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருப்பதை அடுத்து தற்போது முதல் திமுக மற்றும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மேலும் கூட்டணி கொடுத்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த நிலையில் திமுகவைப் பொறுத்தவரை முக ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதல்வர் வேட்பாளராக தொடர்பாக அல்லது
 

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருப்பதை அடுத்து தற்போது முதல் திமுக மற்றும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மேலும் கூட்டணி கொடுத்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் திமுகவைப் பொறுத்தவரை முக ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதல்வர் வேட்பாளராக தொடர்பாக அல்லது வேறு யாரேனும் முன் நிறுத்தப்படுவார்களா? என்று குழப்பம் இருந்து வருகிறது

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ’தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் கூடி புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று கூறினார். செல்லூர் ராஜுவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். எடப்பாடியார் தான் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்!
வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே! என்று குறிப்பிட்டுள்ளார்

அடுத்த முதல்வர் குறித்து அமைச்சர்கள் இருவர் வெவ்வேறு கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web