கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசனையும், கமல்ஹாசன் தமிழக அரசையும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ஜெயகுமார் கிட்டத்தட்ட தினந்தோறும் கமல்ஹாசனை தாக்கி பேசி வருகிறார். இந்த நிலையில் இன்னொரு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது கமல்ஹாசனை கேலியும் கிண்டலுடன் கூடிய விமர்சனத்தை செய்துள்ளார். நேற்று சிவகாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை பற்றி பேசாத நடிகர் கமல், தற்பொழுது
 

தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசனையும், கமல்ஹாசன் தமிழக அரசையும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ஜெயகுமார் கிட்டத்தட்ட தினந்தோறும் கமல்ஹாசனை தாக்கி பேசி வருகிறார்.

இந்த நிலையில் இன்னொரு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது கமல்ஹாசனை கேலியும் கிண்டலுடன் கூடிய விமர்சனத்தை செய்துள்ளார்.

நேற்று சிவகாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை பற்றி பேசாத நடிகர் கமல், தற்பொழுது போராடும் மக்களிடம் பேசுவதைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருப்பதாகவும், கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது. வசனம் எழுதிக் கொடுத்தால் பேசக்கூடியவர்” என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்

மேலும் எத்தனை முறை தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-தான் வெற்றிபெறும், மற்றவர்கள் அனைவரும் ஜீரோதான் என்று கூறிய அமைச்ச்சர், காவிரி விவகாரத்தில் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்

From around the web