கல்வித் துறை அமைச்சருக்கும் கண்டறியப்பட்டது கண்ணுக்கு தெரியாத கிருமி!

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது!
 
கல்வித் துறை அமைச்சருக்கும் கண்டறியப்பட்டது கண்ணுக்கு தெரியாத கிருமி!

மக்கள் மத்தியில் தற்போது மிகவும் அச்சத்தை, கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்து வருகிறது ஆட்கொல்லி நோயான கொரோனா.  பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா கண்டறியப்படுகிறது. இது ஏழை பணக்காரன் என்று பாராமல் அனைத்து மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த ஆட்கொல்லி நோய்க்கு எதிராக மிகுந்த போராட்டத்தில் உள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்குகளையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில்  தமிழகத்தில் இந்த கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனா பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

corona

மேலும் நேற்றைய தினம் முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. மேலும் பல தலைவர்களுக்கும் நோயின் தாக்கம் இருந்தது தெரிய வந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா இருந்ததாக கூறப்பட்டது. மேலும் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும் அவர் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைகள்  செய்யவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா கல்வித் துறை அமைச்சருக்கும் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரிஆளுக்குகொரோனா கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தி உள்ளார்.

From around the web